கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி அருகே வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதிபட கூறியுள்ளார்.
கன்னியாகுமாரி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியடிகளின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வர்த்தக துறைமுகம் அமைப்பதற்கான பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், அங்கு நிச்சயம் துறைமுகம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.