புதிய பதவி நீக்கத்தை ஏற்படுத்தி பதவிகாலத்தை ஓட்டிவிட அரசு முயல்வதாக ஸ்டாலின்

Forums Inmathi News  புதிய பதவி நீக்கத்தை ஏற்படுத்தி பதவிகாலத்தை ஓட்டிவிட அரசு முயல்வதாக ஸ்டாலின்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13594
    Inmathi Staff
    Moderator

    புதிய பதவி நீக்கத்தை ஏற்படுத்தி பதவிகாலத்தை ஓட்டிவிட அரசு முயல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்எல்ஏ கருணாஸுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசிப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். எம்எல்ஏக்களாக இருந்த 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளி வரப்போகின்ற நேரத்தில் புதிய பதவி நீக்கத்தை வைத்து பதவி காலத்தை ஓட்டி விடலாம் என அடுத்த தகுதி நீக்கத்திற்கு திட்டமிடுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    அதற்காக, நடுநிலை தவறாதவராக இருக்கவேண்டிய சட்டப்பேரவைத் தலைவரை பயன்படுத்துவது பாரம்பரிய மரபைக் கேலிக் கூத்தாக்கும் செயல் என ஸ்டாலின்விமர்சித்துள்ளார். தமிழக அரசு நிர்வாகத்தை அ.தி.மு.க அரசிடமிருந்து மீட்டு, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் இழந்துவிட்ட செழிப்பினை மீண்டும் பெற குடியரசுத் தலைவர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This