விநாயகர் சதூர்த்திக்காக பிரித்த பணத்தில் மதுவுடன் நடந்த கிடாவிருந்தில் ஏற்பட்ட மோதலில் பாஜக பிரமுகர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை ஆலாந்துறை பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக அப்பகுதி மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த நிலையில் வசூல் பணத்தில் கடந்த 30ஆம் தேதி பா.ஜ.கவினர் மதுவுடன் கிடா விருந்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
அப்போது வரவு செலவு கணக்கு பார்ப்பதில் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் நாகராஜ் என்பவரை, பா.ஜ.க இளைஞர் அணி தலைவரான குட்டி(எ) கந்தசாமி பாட்டிலால் குத்தியதாகவும் இதில் படுகாயமடைந்த நிலையில் கோவை கே.ஜி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான கந்தசாமியை தேடி வருகின்றனர்.