இயக்குனர் மணி ரத்னத்தின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Forums Inmathi News இயக்குனர் மணி ரத்னத்தின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13584
    Inmathi Staff
    Moderator

    சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    செக்கச் சிவந்த வானம் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க முடியவில்லை என்றால் விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னத்தின் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது.

    அதைத் தொடர்ந்து 2 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அழைத்த மர்ம நபர், சர்சைக்குரிய வசனத்தை உடனடியாக நீக்காவிட்டால் வெடிகுண்டு வீசப்படும் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து மணிரத்னத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவரது அறிவுறுத்தலின்படின்,  அலுவலகப் பணியாளர், அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

    • This topic was modified 1 year, 11 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This