அரசு நிலம் ஆக்கிரமிப்பு:சாஸ்திரா பல்கலைகழத்திற்கு அரசு துணை போக கூடாது-ஸ்டாலின்

Forums Inmathi News அரசு நிலம் ஆக்கிரமிப்பு:சாஸ்திரா பல்கலைகழத்திற்கு அரசு துணை போக கூடாது-ஸ்டாலின்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13557
    Inmathi Staff
    Moderator

    அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்திரா பல்கலைக்கழகத்திற்கு அரசு துணை போகக்கூடாது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை அமைக்க ஒதுக்கிய நிலத்தில் 58ஏக்கர் 17சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் அக்டோபர் மூன்றாம் நாளுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

    30ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அதைத் தக்க வைத்துக் கொள்ளும் பேராசையுடன் ஒரு பல்கலைக்கழகம் நடந்து கொள்வதும், அதற்கு வருவாய்த் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோர் துணை போவதும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே செயலிழக்கச் செய்து, எள்ளி நகையாடுவது போல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஆக்கிரமித்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து சாஸ்திரா பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தபோது, தமிழக அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் கூட ஆஜராகவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு வேறு வழியின்றி ஆக்கிரமித்த இடத்தில் இருந்து வெளியேறக் கோரிப் பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் அறிவிக்கை அனுப்பியதையும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆக்கிரமித்த நிலத்தைக் காலி செய்யாமல் ஆளுநர் மாளிகைக்கு சாஸ்திரா பல்கலைக்கழகத் துணை வேந்தர் போய் வந்திருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இறுதித் தீர்ப்பை அளித்த பிறகும், சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்காமல் தமிழக செயலற்று இருப்பது ஏன்? என ஸ்டாலின் வினவியுள்ளார். இனியும் தாமதிக்காமல் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 58ஏக்கர் நிலத்தை உடனடியாகக் கைப்பற்றி, திறந்த வெளிச் சிறைச்சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்கவேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This