தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஒ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களுடன் மத்திய அரசு இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு சிதம்பரமும், வேதாந்தா நிறுவனத்துக்கு வேறு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், டெல்லியில் இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.