எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் மதுரையில் அமைகிறது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடைமுறைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். சிலை திருட்டு வழக்குகள் குறித்து சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேலின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார்.