தீபாவளி உள்ளிட்ட விடுமுறை காலத்தில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பேருந்து கட்டண உயர்வு மற்றும் திருவிழாக் கால விடுமுறை ஆகியவற்றின் காரணமாக ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் 15 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.