உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, வருகிற 18ஆம் தேதி முதல் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தேவசம் போர்டு இன்று பேச்சு நடத்த உள்ளது.
இது தொடர்பாக, பினராயி விஜயனை தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது, சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது பற்றியும், அவர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பது பற்றியும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.