சென்னை நந்தனத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே திட்டமிட்டபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால் தன்னால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்றார்.