சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இரண்டாவது நாளாக சிலைகளை பறிமுதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் ரன்வீர் ஷா என்ற தொழிலதிபர் வீட்டில் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், 12 உலோக சிலைகள், நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் கொண்ட 22 கற்தூண்கள், கற்சிலைகள் என 89 கலைப்படைப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து இன்றும் சோதனை தொடர்கிறது.