ஜீரோ பாயின்ட் பகுதியை வந்து சேர்ந்த கிருஷ்ணா நீர்: பூக்கள் தூவி வரவேற்பு

Forums Inmathi News ஜீரோ பாயின்ட் பகுதியை வந்து சேர்ந்த கிருஷ்ணா நீர்: பூக்கள் தூவி வரவேற்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13385
    Kalyanaraman M
    Keymaster

    சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர-தமிழக அரசுகளின் ஒப்பந்தத்தின் படி, ஆண்டிற்கு 2 தவணைகளாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும்.

    கண்டலேறு அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த நீரானது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது. தமிழக எல்லைக்கு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீரை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூக்கள் தூவி வரவேற்றனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This