ஆன்லைன் மருந்து விற்பனையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஏராளமான மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மருந்து வணிகத்தை ஊக்குவிக்கும் விதமாக வரைவு அறிக்கை ஒன்றை மத்திய அரசு கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியிட்டது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என மருந்து வணிகர்கள் அறிவித்திருந்திருந்தனர். இதையொட்டி விழுப்புரம், நெல்லை, கரூர், ஈரோடு, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மருந்துக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மாலை ஆறு மணிக்கு பிறகே மருந்துக்கடைகள் திறக்கப்படும்.