வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து வகையிலும் தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். 2014-15-ல் ஏற்பட்ட பெருமழை, பாதிப்புக்களை கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.