எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று கருணாஸ் ஆஜர்

Forums Inmathi News எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று கருணாஸ் ஆஜர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13317
    Inmathi Staff
    Moderator

    வேலூர் மத்திய சிறையிலிருந்து எம்எல்ஏ கருணாஸை, போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றனர்.

    முதலமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நுங்கம்பாக்கம் போலீசார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அந்த மனு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனையடுத்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக வேலூர் மத்திய சிறையில் இருந்து கருணாஸை போலீசார் சென்னை அழைத்து சென்றனர். இதேபோல், ஜாமீன் கோரி கருணாஸ் தாக்கல் செய்த மனுவும் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This