சாகர் மாலா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி பகுதியில் ஒரு துறைமுகம் வர இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. சார்பில் பொருளாதார மேம்பாட்டில் துறைமுகங்களின் பங்களிப்பு என்ற பெயரில் கருத்தரங்கு நடைபெறுகிறது.
இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், சாகர் மாலா திட்டத்தின் கீழ் 8 லட்சத்து 57 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 577 திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகத் கூறினார்.
தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட பல தமிழகத் துறைமுகங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற இருப்பதாகவும் தெரிவித்தார். மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் குறித்து கலந்தாய்வு கூட்டம் பத்து நாட்களில் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.