சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைதை கண்டித்து, சென்னையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த 55 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டு,வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது கைதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், சென்னை நந்தனம் பகுதியில் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் நேற்று இரவு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி அங்காள பரமேஸ்வரி அனைவரையும் வருகிற 8 ந் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை யடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.