தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள 1,800 மருத்துவர் காலிபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்,மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும், செவிலியர் பணி இடங்கள் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.