தேர்தலை நடத்த அஞ்சும் கட்சி அதிமுக இல்லை எனத் தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள கூட்டுறவுத்துறைப் பதிவாளர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டதைச் சுட்டிக் காட்டிய அவர், தமிழக அரசு எந்தத் தேர்தலையும் நடத்த அஞ்சவில்லை என்றும் தெரிவித்தார்.