முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜர்

Forums Inmathi News முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13281
    Inmathi Staff
    Moderator

    அதிமுக முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன், அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆகியோர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக முதன் முதலில் சந்தேகத்தை எழுப்பியவர் மனோஜ் பாண்டியன். இவரிடம் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.

    இதை அடுத்து இன்று மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து அவர் ஆஜரானார். அவரிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார். 75 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகள் தொடர்பாக விளக்கமளிக்க அப்போலோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனும் ஆஜராகியுள்ளார்.

    இதேபோல் அப்போலோ மருத்துவர்கள் வெங்கட்ராமன், பத்மாவதி ஆகியோரும் விசாரணைக்காக ஆஜராகினர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This