எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு

Forums Inmathi News எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13196
    Inmathi Staff
    Moderator

    நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இழிவாக பேசியதாக 8 இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதிமுக எம்.பி. புகாரின் பேரிலும் தற்போது ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 200 ஏக்கர்  கோயில் நிலத்தை அருண் மொழித்தேவன் ஆக்கிரமித்துள்ளதாக எச்.ராஜா அவதூறு பரப்புவதாகக் கூறி அவர் அளித்த புகாரின் பேரில், ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து சைபர் க்ரைம் போலீசாரும், ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This