சென்னையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 11 பேர், விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இன்று காலையில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ராமச்சந்திரன், அர்ச்சனா, பிரேமா, சினேகா ஸ்ரீ ஆகியோர் ஆஜராகி, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். அதேபோல், செவிலியர்கள் விஜயலட்சுமி, சில்பா ஆகியோரும், லேப் டெக்னீசியன் நளினி ஆகியோரும், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகினர்.