தஞ்சை, திருச்சியில் பெரியார் சிலைக்கு மீண்டும் அவமதிப்பு

Forums Inmathi News தஞ்சை, திருச்சியில் பெரியார் சிலைக்கு மீண்டும் அவமதிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13194
    Inmathi Staff
    Moderator

    தஞ்சாவூர் மாவட்டம் காவாரப்பட்டிலும் திருச்சியிலும் பெரியார் சிலையைச் சமூகவிரோதிகள் அவமதித்துள்ளதால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் காவாரப்பட்டில் உள்ள பெரியார் சிலைக்குச் சில சமூகவிரோதிகள் காலணிகளால் மாலை அணிவித்துள்ளனர்.

    இதை அறிந்த திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலையை அவமதித்தவர்களைக் கைது செய்யக் கோரி ஊர்வலமாகச் சென்றனர். தஞ்சாவூர் – ஒரத்தநாடு நெடுஞ்சாலையில் டயர்களைத் தீவைத்து எரித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைந்து கிடந்தது. இது குறித்துத் திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This