பார்கவுன்சில் உறுப்பினர்களாக 25 பேர் தேர்வு

Forums Inmathi News பார்கவுன்சில் உறுப்பினர்களாக 25 பேர் தேர்வு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13180
    Inmathi Staff
    Moderator

    தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்களாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், 25 உறுப்பினர்கள் பதவிக்காக 192 வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர்.

    தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 53 ஆயிரத்து 620 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். தமிழகம் முழுவதும் 171 வாக்குப்பதிவு மையங்களில்  பதிவான வாக்குகள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், கூடுதல் வழக்கறிஞர் அறை கட்டிடத்தில் பாதுகாக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமையன்று நிறைவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வழக்கறிஞர்கள் பி.எஸ்.அமல்ராஜ், ஆர்.சி. பால்கனகராஜ், எஸ். பிரபாகரன்,  ஆர். விடுதலை, கே.பாலு, உள்ளிட்ட 25 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This