தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவினர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்த தருண் அகர்வாலா குழுவினர், ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இன்று காலையில் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்ற குழுவினர், அங்குள்ள இயந்திரங்கள், உபகரணங்கள், தாமிர உற்பத்தி நடைபெறும் பகுதிகள், ரசாயனக் கிடங்குகள் ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வுக்குப் பிறகு, தருண் அகர்வாலா தலைமையிலான குழுவினர், நண்பகல் 12 மணியளவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பொதுமக்களிடம், கருத்து கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.