இன்று இரண்டாம் கட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்

Forums Inmathi News இன்று இரண்டாம் கட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13177
    Inmathi Staff
    Moderator

    தமிழ்நாடு முழுவதும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றிற்கான, இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் 67 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில், கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 9ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட சிறப்பு முகாம், இன்று முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 674 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.. அதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This