கருணாஸ் கைது : அக்.5 வரை நீதிமன்ற காவல்

Forums Inmathi News கருணாஸ் கைது : அக்.5 வரை நீதிமன்ற காவல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13176
    Inmathi Staff
    Moderator

    முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ், அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். திருவாடனை எம்.எல்.ஏவும், நடிகருமான கருணாஸ் முதலமைச்சரையும், காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பற்றியும், சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இந்நிலையில், இன்று காலை அவரை கைது செய்த போலீஸார், மருத்துவ பரிசோதனைக்கு பின் எழும்பூர்  நீதிபதிகள் குடியிருப்புக்கு அழைத்து சென்று நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This