குமரியில் கிள்ளியூர், திருவட்டார் என மேலும் இரு வட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு

Forums Inmathi News குமரியில் கிள்ளியூர், திருவட்டார் என மேலும் இரு வட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13159
    Inmathi Staff
    Moderator

    நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் 13 வது மாநகராட்சியாக நாகர்கோவில் உருமாறுகிறது.

    விளவங்கோடு தாலுகாவில் இருந்து கிள்ளியூரை தலைமையிடமாகக்கொண்டு கிள்ளியூர் வருவாய் வட்டம் உருவாக்கப்படும் என்றும், கல்குளத்தில் இருந்து தனியாக பிரித்து திருவட்டார் வட்டம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். கன்னியாகுமரி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் தற்போதுள்ள 100 இடங்கள் 150 இடங்களாக உயர்த்தப்படும்  என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This