தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாளை காலை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளது.
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான 3 பேர் குழு இன்று மாலை தூத்துக்குடி வருவதாக அவர் கூறினார்.