தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். மின் உற்பத்தி பகுதி, நிலக்கரி சேமிப்பு பகுதி ஆகிய இடங்களை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்உற்பத்தி இதுவரை பாதிக்கப்படவில்லை என்றும், 6 நாள்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாகவும்,மின் மிகை மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் கூறினார்.