திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அரசின் மீது தொடர்ச்சியாக பொய்யான புகார்களை கூறி வந்தால், நீதிமன்றத்துக்கு செல்ல இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். ஆனால் மின்துறையில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருப்பதாக மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், ஆதாரம் இல்லாமல் தாம் ஒருபோதும் குற்றச்சாட்டுகள் முன்வைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மின்வாரியத்தின் திருநெல்வேலி மண்டல கணக்கு தணிக்கை பிரிவின், உதவி தணிக்கை அதிகாரியின் அறிக்கையை மேற்கோள் காட்டி உள்ள ஸ்டாலின், அந்த அறிக்கையில் மின்சாரம் உற்பத்தி செய்யாத ஒரு காற்றாலையில் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி ஒதுக்கீடு கணக்குகாட்டப்பட்டதாக அதிகாரி கூறியிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இந்த ஆதாரத்தின் பேரில், ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு தயாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Source : Polimer News