அலையாத்தி காடுகளை அழித்தால் கிரிமினல் நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவு

Forums Communities Fishermen அலையாத்தி காடுகளை அழித்தால் கிரிமினல் நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #13041
  Inmathi Staff
  Moderator

  மகாராஷ்டிரா  மாநிலம்  முழுவதும்   கடற்கரை  ஓரங்களிலும், கழிமுக  முகத்துவாரங்களிலும்   விளைந்து   செழித்து  வளர்ந்து  ஆண்டாண்டு  காலங்களாக  சுற்றுசூழலையும்  பல்லுயிர்  பாதுகாப்பு அரணாகவும்  விளங்கும் அலையாத்தி  காடுகளை  அழிக்கும்  வகையில் குப்பைகளையும்   கட்டிட   இடிபாடுகளின்   கல்  குவியல்  களையும் கான்க்ரீட்   கழிவுகளையும்   கொட்டுவதை   தடை செய்து   மும்பை   உயர்நீதி  மன்றம்   உத்தரவிட்டுள்ளது.

  அலையாத்தி  (Mangrove)  காடுகள்   மற்றும்  அதனை  ஒட்டிய  50  மீட்டர்  தூரத்துக்கு  பாதுகாக்கப்பட்ட  பகுதியாக  (Buffer zone)  கருதி  உரிய பாதுகாப்பு   நடவடிக்கைகள்   எடுக்கப்படவேண்டும்   என்றும்  அப்பகுதியில்  குப்பைகள்  மற்றும்  கட்டிடக்கழிவுகளை  கொட்டியவர்கள்  மீது   கிரிமினல்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும். என்றும்   மும்பை   உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

  அலையாத்தி   காடுகளை   அழிப்பவர்களை   உயிர் வாழும்  அடிப்படை   உரிமைகளை   தடுப்பவர்களாக  கருதி   அவர்கள்  மீது   உரிய   சட்டபூர்வமான  நடவடிக்கை  எடுக்க வேண்டியது  மாநில  அரசின்  கடமை  என்று   அறிவுறுத்தி  உள்ளது.

  கடந்த  2005ம்  ஆண்டில்  வழங்கபட்ட  உயர்நீதிமன்றத்தின்  இடைக்கால   உத்தரவை  உறுதி  படுத்தி  நீதி  அரசர்  அபய்  ஒகா   மற்றும்  நீதியரசர்   ரியாஸ்   சோக்லா   அமர்வு  இந்த  தீர்ப்பை  வழங்கியுள்ளது.

  கடந்த  2004ம்  ஆண்டு  அலையாத்தி   காடுகள்   அழிக்கப்படுவதை  தடுக்க  வேண்டும்   என்று  கோரி  மும்பை  சுற்றுசூழல்  நடவடிக்கை  குழு   (Bombay  Environmental  Action  Group)  தாக்கல்   செய்த  வழக்கில்  ஏற்கனவே  2005ம்  ஆண்டில்   இடைக்கால   உத்தரவு  பிறப்பித்து   இருந்தது.

  தற்போது  அந்த  வழக்கில்   இறுதி  தீர்ப்பு   வழங்கப்பட்டுள்ளது

  கடந்த  2005ம்  ஆண்டு  இடை  கால  உத்தரவில்  அலையாத்தி  காடுகள்   அள்ள   பகுதிகளில்   கட்டிட   கழிவுகளை   கொட்டவோ,  குப்பைகளை   கொட்டவோ,  கட்டிடங்களை   கட்டவோ  தடை  செய்து  உத்தரவு   பிறப்பிக்கப்பட்டிருந்தது.

  அந்த   சரித்திர   முக்கியத்துவம்  வாய்ந்த   2005ம்  ஆண்டு  இடைக்கால   உத்தரவுக்கு   பிறகு    மகாராஷ்டிரா   மாநிலத்தின்   கடற்கரை  மாவட்டங்களின்   பல   பகுதிகளில்   15,087  ஹெக்டர்  அலையாத்தி காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக  (காப்புக்காடுகள்) அரசால்  அறிவிக்கப்பட்டது.  541 ஹெக்டர் நிலப்பரப்பில் மீண்டும்  அலையாத்தி  காடுகள்   பயிரிடப்பட்டன.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This