Forums › Communities › Fishermen › அலையாத்தி காடுகளை அழித்தால் கிரிமினல் நடவடிக்கை ஐகோர்ட் உத்தரவு
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 3 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
September 20, 2018 at 7:24 pm #13041
Inmathi Staff
Moderatorமகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடற்கரை ஓரங்களிலும், கழிமுக முகத்துவாரங்களிலும் விளைந்து செழித்து வளர்ந்து ஆண்டாண்டு காலங்களாக சுற்றுசூழலையும் பல்லுயிர் பாதுகாப்பு அரணாகவும் விளங்கும் அலையாத்தி காடுகளை அழிக்கும் வகையில் குப்பைகளையும் கட்டிட இடிபாடுகளின் கல் குவியல் களையும் கான்க்ரீட் கழிவுகளையும் கொட்டுவதை தடை செய்து மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலையாத்தி (Mangrove) காடுகள் மற்றும் அதனை ஒட்டிய 50 மீட்டர் தூரத்துக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக (Buffer zone) கருதி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் அப்பகுதியில் குப்பைகள் மற்றும் கட்டிடக்கழிவுகளை கொட்டியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலையாத்தி காடுகளை அழிப்பவர்களை உயிர் வாழும் அடிப்படை உரிமைகளை தடுப்பவர்களாக கருதி அவர்கள் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2005ம் ஆண்டில் வழங்கபட்ட உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை உறுதி படுத்தி நீதி அரசர் அபய் ஒகா மற்றும் நீதியரசர் ரியாஸ் சோக்லா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு அலையாத்தி காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று கோரி மும்பை சுற்றுசூழல் நடவடிக்கை குழு (Bombay Environmental Action Group) தாக்கல் செய்த வழக்கில் ஏற்கனவே 2005ம் ஆண்டில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது.
தற்போது அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
கடந்த 2005ம் ஆண்டு இடை கால உத்தரவில் அலையாத்தி காடுகள் அள்ள பகுதிகளில் கட்டிட கழிவுகளை கொட்டவோ, குப்பைகளை கொட்டவோ, கட்டிடங்களை கட்டவோ தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 2005ம் ஆண்டு இடைக்கால உத்தரவுக்கு பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களின் பல பகுதிகளில் 15,087 ஹெக்டர் அலையாத்தி காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக (காப்புக்காடுகள்) அரசால் அறிவிக்கப்பட்டது. 541 ஹெக்டர் நிலப்பரப்பில் மீண்டும் அலையாத்தி காடுகள் பயிரிடப்பட்டன.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.