ஆந்திராவில் ரூ 500 கோடி வெளிநாட்டு முதலீட்டில் கூண்டு மீன் வளர்ப்பு

Forums Communities Fishermen ஆந்திராவில் ரூ 500 கோடி வெளிநாட்டு முதலீட்டில் கூண்டு மீன் வளர்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13039
    Inmathi Staff
    Moderator

    ஆந்திர  மாநிலத்தில்   பல்வேறு   பகுதிகளில்   உள்ள   நீர்   நிலைகளில்  ரூ  500 கோடி  முதலீட்டில்   கூண்டுகளில்  மீன்  வளர்த்து   வெளிநாடுகளுக்கு    ஏற்றுமதி   செய்யும்  வகையில்   ஆந்திர   மாநில  அரசு   அமெரிக்கா   நிறுவனத்துடன்   இனைந்து    திட்டம்  ஒன்றை    அமுல்படுத்த   முடிவு   செய்துள்ளது.

    ஆந்திர  மாநில  முதலமைச்சர்  சந்திரபாபு  நாயுடு  முன்னிலையில்  மாநில   அரசு   உயர்  அதிகாரிகளும்  அமெரிக்கா   நாட்டு    நிறுவனமான   “தி பிஷ் இன்”  என்ற   நிறுவனமும்   நேற்று   புரிந்துணர்வு   ஒப்பந்தம்    ஒன்றில்  கையெழுத்திட்டனர்.

    ஆந்திர  மாநில  தலை நகர்  அமராவதியில்  உள்ள முதலமைச்சர்  அலுவலகத்தில்  நடந்த  நிகழ்ச்சியில்  புரிந்துணர்வு  ஒப்பந்தம்  கையெழுத்தானது.

    உலகம்  முழுவதும்  மக்களால்  விரும்பி  உண்ணப்படும்  “திலேபியா”  மீன்  வகைகளை  ஆந்திர மாநிலம் முழுவதிலும்  உள்ள  பல  நீர்நிலைகளில்  கூண்டு  அமைத்து   வளர்த்து   அறுவடை  செய்து   வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி   செய்ய  திட்டமிட்டுள்ளனர்

    இந்த வகை  மீன்களில்  வைட்டமின்  B, D  மற்றும் ஒமேகா-3 சத்துகள்  நிறைந்து  இருப்பதாகவும்  அதை  வளர்த்து  அறுவடை செய்வதற்கு  ஏற்ற  சீதோஷ்ண  சூழல், குஞ்சுபொரிப்பகங்கள்  ஏற்றுமதிக்கான  விமான  கப்பல்  போக்குவரத்து  வசதிகள்  மற்றும்  உள்நாட்டு  மீன் வளர்ப்பில்  அனுபவம்  உள்ள  மீனவர்கள்  ஆகிய  அனைத்து  அம்சங்களும்  ஆந்திராவில்  ஒருங்கே  அமையப்பெற்றுள்ளதால்  ஆந்திரப்பிரதேசம்  சர்வதேச  நிறுவனங்களை ஈர்க்கும்  தன்மையுள்ளதாக  இந்த நிகழ்ச்சியின் போது  உயர் அதிகாரிகள்  தெரிவித்தனர்.

    மாநிலம்   முழுவதும்   பல்வேறு   நீர்  நிலைகளில் ரூ 500 கோடி  வெளிநாட்டு  மூலதனத்தில்  செயல்படுத்தப்படும்  இத்திட்டத்தின் மூலம்  4 ஆயிரம்   இளைஞர்களுக்கு  நேரடியாகவும்  8 ஆயிரம்  இளைஞர்களுக்கு  மறைமுகமாகவும்  வேலை வாய்ப்பு  கிடைக்கும்  என்றும்  அவர்கள் தெரிவித்தனர்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This