சென்னை மயிலாப்பூர் கோயிலில் பழமையான மயில் சிலையை மாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோரைக் கைது செய்ய கூடாது என்ற உத்தரவு 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேலும் 3 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.