முதல்வரை அவதூறாக பேசியதற்கு கருணாஸ் மீது வழக்கு பதிவு

Forums Inmathi News முதல்வரை அவதூறாக பேசியதற்கு கருணாஸ் மீது வழக்கு பதிவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13037
    Inmathi Staff
    Moderator

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய அந்த இயக்கத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், முதலமைச்சர் குறித்தும், காவல்துறை அதிகாரி ஒருவர் பற்றியும் அவதூறாக பேசினார். கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சு, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகின.

    இதனைத் தொடர்ந்து, இருபிரிவினரிடையே மோதலை உருவாக்குதல், சாதி-மத-இன மோதலை தூண்டுவது, கொலை மிரட்டல், கூட்டுச்சதி, அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This