மாற்றுத்திறனாளி சிறுமி பாலியில் பலாத்கார வழக்கில், நீதிமன்ற விசாரணை ரகசியமாக நடைபெறும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக கடந்த வாரம் 300 பக்க குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில்,சிறுமி தொடர்பான பாலியல் வழக்கு என்பதால், மூடிய அறையில் விசாரணையை ரகசியமாக மேற்கொள்ள உள்ளதாக நீதிபதி கூறினார். மீண்டும் வரும் 25ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு விசாரிப்பதாக உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.