Forums › Communities › Farmers › நெற்பபயிரைத் தாக்கும் பச்சை தத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்தும் முறை!
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 4 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
September 20, 2018 at 6:40 pm #13031
Inmathi Staff
Moderatorஇலைகள் நுனி முதல் அடிப்பகுதி வரை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். பயிரின் வீரியம் குறைந்து வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படும்.
பயிர் வாடுதல் அல்லது முற்றிலுமாக காய்தல். பயிரை முழுவதுமாக தாக்கி அதன் சாற்றை உறிஞ்சுதல், இலையுறைகள் அல்லது நடுநரம்புகளுக்குள் வெள்ளையான அல்லது வெளிறிய மஞ்சள் நிறமான முட்டைகள் இருக்கும்.
பயிரின் மேல்பகுதியில் வெளுத்த பச்சை நிற முதிர் பூச்சிகள் இருக்கும். இப்பூச்சிகள் துங்ரோ, நெல் மஞ்சள் குட்டை போன்ற வைரஸ் நோய்களைப் பரப்புகின்றன.
பச்சையான ஒளி கசியும் தன்மையுடைய முட்டைகள், இலைத்தாளின் நடுநரம்பு அல்லது நெற்பயிர் உறை அல்லது பச்சைப்புல் ஆகியவற்றில் இடப்பட்டிருக்கும். ஒரு வரிசையில் 10-15 குவியல்களாக முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
இளம் பூச்சிகள் மென்மையான உடலுடன் மஞ்சளான வெண்மை நிறத்தில் இருக்கும். படிப்படியாக இந்நிறம், பச்சையாக மாறி 5 இளம் பூச்சிகள் வளர்ச்சி நிலைகளுடனும் காணப்படும். பின்பு 18-20 நாள்களில் முதிர் பூச்சிகள் உருவாகிறது. பச்சை தத்துபூச்சியில் முதிர் பூச்சிகள் 3-5 மி.மீ. நீளம் கொண்டு, பிரகாசமான பச்சை நிறத்தில் வேறுபட்ட கருப்பு நிற அடையாளங்களுடன், கூம்புப் பலகை வடிவில் சிறப்பான விட்ட கோடு இயக்கத்துடன் காணப்படும். ஆண் பூச்சியின் முன் இறக்கையின் நடுப்பகுதியில் கருப்புநிறப் புள்ளி காணப்படும். ஆனால் பெண் இனப் பூச்சியில் அவை கிடையாது. ஜூலை – செப்டம்பர் மாதத்தில் பூச்சிகள் செயல்திறனுடன் விளங்கும். பெண் இனப்பூச்சிகள் 50-55 நாள்கள் வரை வாழக் கூடியவை.
முதிர் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சி எதிர்ப்பு ரகங்களான ஐ.ஆர்.50, சி.ஆர்.1009, கோ 46 பயிரிட வேண்டும்.
அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு 12.5 கிலோவை நாற்றங்காலில் அளித்தால் பச்சை தத்துப் பூச்சியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம். 6025 வலை வீச்சுகள் (அ) 5 குத்து தழைப்பருவத்தில் (அ) பூத்தல் பருவத்தில் 10 குத்து (அ) துங்ரோ உட்பரவல் இடங்களில் 2 குத்து. வயலில் துங்ரோ மற்றும் பச்சைத் தத்துப் பூச்சிகள் இருப்பைக் கண்காணிக்க வேண்டும். நடவு செய்யப்பட்ட வயலின் குறுக்கில், பக்கவாட்டில் நடக்கும்போது 20 குத்துக்களைச் சரிபார்க்க வேண்டும்.
ஸ்ட்ரெப் ஸிப்டீரன்ஸ், சிறு குளவிகள், மற்றும் நுôற் புழுக்கள் ஆகியவை தத்துப்பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகளில் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அதனைக் கொன்றுவிடும். மேலும் நீர்வாழ் நாவாய்ப்பூச்சிகள், ஊசித்தட்டான், தட்டான் பூச்சிகள், மற்றும் சிலந்திகள் ஆகிய பூச்சிகளாலும் பச்சைத் தத்துப்பூச்சி தாக்கப்படுகிறது. பூசண நோய்க் காரணிகள் பச்சைத் தத்துப்பூச்சியின் இளம் உயிரிகள் மற்றும் முதிர் பூச்சிகளைத் தாக்குகிறது.
விளக்குப் பொறிகளை பயன்படுத்துவது பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான மிக சிக்கன முறையாகும். அதிகாலை நேரத்தில் விளக்குப் பொறியைச் சுற்றி பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தோ அல்லது தூவியோ கவரப்பட்ட பச்சைத் தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். -
AuthorPosts
- You must be logged in to reply to this topic.