எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் துவக்கம்

Forums Inmathi News எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் துவக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13020
    Inmathi Staff
    Moderator

    எம்பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் சென்னையில் தொடங்கப்பட்டது.

    இந்நீதிமன்றத்தை துவக்கி வைத்து பேசிய, உயர் நீதிமன்ற நீதிபதி குலுவாடி ரமேஸ், ஊடகங்கள் மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை பெரிது படுத்திக் காட்டுவதாக தெரிவித்தார். மேலும், நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும் முன்னரே ஊடகங்களே சிலரைக் குற்றவாளிகள் எனத் தீர்மானித்து விடுவதாகவும் அவர் விமர்சித்தார். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், விரைந்து தீர்ப்பளிக்க இந்த சிறப்பு நீதிமன்றங்கள் உதவும் எனவும் நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் தெரிவித்தார்.

    தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக 260 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவை அனைத்தும் இந்த சென்னையில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This