காவல் துறையினருக்கு உடல் மற்றும் மன நல பயிற்சி துவக்கம்

Forums Inmathi News காவல் துறையினருக்கு உடல் மற்றும் மன நல பயிற்சி துவக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #13018
    Inmathi Staff
    Moderator

    காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலனைப் பேண உதவும், நிறைவாழ்வுப் பயிற்சி திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்.

    காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் காவல்துறையினர் இதில் பங்கேற்றனர். பெங்களூரை சேர்ந்த தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து, காவலர் நிறைவாழ்வு பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் நிகழ்ச்சியில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This