சென்னையில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, TN Smart என்ற தொழில்நுட்பம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், வெள்ள அபாயம், மழை பெய்யப்போகும் அளவு மற்றும் பாதிக்கப்படும் பகுதிகளை 5 நாட்களுக்கு முன்பே கண்டறிந்து, பொதுமக்களை மீட்க முடியும் என்றும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.