மணல் கொள்ளைக்கு ஆதரவளிக்கும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் : நீதிமன்றம் உத்தரவு

Forums Inmathi News மணல் கொள்ளைக்கு ஆதரவளிக்கும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் : நீதிமன்றம் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12951
    Inmathi Staff
    Moderator

    <p style=”text-align: left;”>தமிழக ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராமதிலகம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல் கொள்ளையை தடுக்கும் வகையிலான சுற்றறிக்கையை அக்டோபர் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தமிழக அரசு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தனர்.</p>
    மேலும், குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதும் குற்றம்தான் என்றும், உடந்தையாக இருப்பவர்களை தண்டிக்காமல் இருக்க முடியாது என்றும் நீதிபதிகள்  கூறினர். மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை துறைரீதியாக தண்டிப்பதுடன், அவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கவும் வேண்டும் என்றும், அதை சுற்றறிக்கையில் தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This