எச்.ராஜாவுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்

Forums Inmathi News எச்.ராஜாவுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12945
    Inmathi Staff
    Moderator

    புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி விழாவில் நீதிமன்றத் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் கடுமையாக விமர்சித்தார். இதனால் அவரைக் கைது செய்ய வேண்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    உயர் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர் நீதிமன்றத்தில் சுமோட்டோ வழக்கு எடுக்கும் கோரிக்கை ஒரு அமர்வில் நிராகரிக்கப்பட்டு இன்னொரு அமர்வு தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது.

    இந்நிலையில் ஹெச்.ராஜாவுக்கு தற்போது உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தை அவமதித்து பேசியது குறித்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர அனுமதி கோரி தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பாளர் கண்ணதாசன் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளித்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட அரசு தலைமை வழக்கறிஞர், அக்டோபர் 3-ம் தேதி மாலை 4:30 மணிக்கு ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This