காய்கறி பயிர்களுக்கு பயிர் ஊக்கிகள்

Forums Communities Farmers காய்கறி பயிர்களுக்கு பயிர் ஊக்கிகள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12930
  Inmathi Staff
  Moderator

  பெங்களூருவிலுள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் காய்கறி பயிர்களுக்கென்றே ஒரு பயிர் ஊக்கி கலவையைத் தயாரித்துள்ளது.

  நுண்ணூட்டச் சத்துக்கள் பயிருக்கு கிடைப்பதில் அவை இடப்படும் முறை முக்கிய பங்காற்றுகிறது. சுண்ணாம்பு அதிகமுள்ள மண்ணில் இடப்படும் இரும்புச்சத்து செடிக்கு கிடைப்பதில்லை. மேலும் மண்ணின் கார அமிலத் தன்மையைப் பொறுத்து சத்துக்கள் பயிருக்கு கிடைக்கும் அளவு வேறுபடும்.
  இந்த பிரச்னைகளைத் தவிர்க்க இலைவழியாகத் தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  இந்த காய்கறி பயிர் ஊக்கி பயிரின் வளர்தன்மை தேவைக்கேற்ப அதன் அளவும் தெளிக்கப்பட வேண்டிய நேரமும் அளவிடப்பட்டுள்ளது.
  காய்கறி அதிக விளைச்சல் பெற தயாரிக்கப்பட்ட இலைவழி பயிர் ஊக்கியில் உள்ள நுண்ணூட்டங்கள் அளவு: துத்தநாகம்-4.5%, போரான்-1%, மாங்கனீசு-0.85%, இரும்பு-2.1%, தாமிரம்-0.1%.
  பயன்படுத்தும் முறை: காய்கறிகளுக்கேற்ப இதன் அளவு மாறுபடும்.
  15 லிட்டர் நீருக்கு ஒரு எலுமிச்சையின் சாறு ஒட்டும் திரவம் (7.5 மில்லி) கலந்து தெளிக்கவும்.
  நடவு செய்த நாளிலிருந்து 5-30 நாட்கள் கழித்து அல்லது விதைத்த 40-45 நாட்கள் கழித்து முதல் தெளிப்பு செய்ய வேண்டும்.
  முதல் தெளிப்பிலிருந்து முறையே 30 நாட்கள் கழித்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் தெளிப்பு செய்ய வேண்டும்.
  காலை 6-11 மணி அல்லது மாலை 4-6.30 மணிக்குள் தெளிக்க வேண்டும்.
  பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்கலாம்.
  முதலில் ஊக்கியைக் கலந்துவிட்டு பின் பூச்சிமருந்துகளைக் கலக்க வேண்டும்.
  தாமிரம் கலந்த பூச்சிக்கொல்லிகளுடன் மட்டும் கலந்து தெளிக்கக்கூடாது.
  காய்கறிகள் – ஊக்கி அளவு(1 லிட்டர் தண்ணீருக்கு)
  தக்காளி, குடைமிளகாய், பூக்கோஸ், முட்டைக்கோஸ் – 5 கிராம்
  மிளகாய், கத்தரி, வெங்காயம் – 3 கிராம்
  பீன்ஸ், வெண்டை, தட்டைப்பயறு – 2 கிராம்
  கொடிவகை காய்கள், பீர்க்கன்,
  பாகல், புடலை, பூசணி, சுரைக்காய் – 1 கிராம்
  கத்தரியில் ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் பயிர் ஊக்கி என்ற அளவில் நடவுசெய்த 40வது நாள், 60வது நாள், 80வது நாளில் இலைவழி தெளிக்கப்பட்டது.
  செடிகளில் காய்களின் எண்ணிக்கை, எடை அதிகரித்து 20 முதல் 25 சதவீதம் கூடுதல் விளைச்சல் கிடைத்துள்ளது.

  தொடர்புக்கு: இயக்குனர், இந்திய தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், ஹசர்கட்டா (அஞ்சல்), பெங்களூரு. போன்: 0802846 6420

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This