சிலை கடத்தலில் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியவர்கள் அர்ச்சகர்கள் என நீதிமன்றம்

Forums Inmathi News சிலை கடத்தலில் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியவர்கள் அர்ச்சகர்கள் என நீதிமன்றம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12916
  Inmathi Staff
  Moderator

  சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை காணாமல் போனதால், புதிய சிலை வைத்து குடமுழுக்கு நடத்த உத்தரவிடக் கோரும் வழக்கு சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது.

  இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் கோயில் சிலைகள் காணாமல் போனது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றுவதாகவும் தெய்வீக பணியை ஆற்றவில்லை என கருத்துக் கூறினர்.

  தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், பதிலளிக்க கால அவகாசம் அளிக்குமாறும் இந்து சமய அறநிலைய துறை தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This