சென்னையில் மீட்கப்பட்ட குழந்தை தொண்டு நிறுவனத்தில் பராமரிக்க ஒப்படைப்பு

Forums Inmathi News சென்னையில் மீட்கப்பட்ட குழந்தை தொண்டு நிறுவனத்தில் பராமரிக்க ஒப்படைப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12909
    Inmathi Staff
    Moderator

    சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தையின் உடல் நலம் தேறியதை அடுத்து, அக்குழந்தையை தற்காலிகமாக பராமரிக்கும் பொறுப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 15ஆம் தேதி வளசரவாக்கத்தில் கால்வாயில் மிதந்த ஆண் குழந்தையை கீதா என்பவர் கண்டெடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தார். குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படவே குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து உடல் நலம் தேறிய நிலையில், போரூரில் உள்ள காரூண்யா குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு ஒப்படைகப்பட்டுள்ளது. இதற்கான செலவுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 150 ரூபாய், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This