கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Forums Inmathi News கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #12907
  Inmathi Staff
  Moderator

  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி வெளிநாடு செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக அமலாக்கத்துறை கார்த்தியை வெளிநாடு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணைக்குக் கார்த்தி ஒத்துழைக்கவில்லை என்றும், அதனால் அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. கார்த்தியின் மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனது மகளைக் கல்வி நிறுவனத்தில் சேர்ப்பதற்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கார்த்தி சார்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், செப்டம்பர் 20 முதல் 30 வரை கார்த்தி வெளிநாடு சென்றுவர அனுமதி அளித்துள்ளது.

  சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற விதிகளை மீறி ஒப்புதல் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அது தொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் மீது விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This