ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அதிமுக அரசை கண்டித்து, சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும், திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் எதிரே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.