சென்னை மாதவரத்தில் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரியைத் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடக்கி வைத்தார்.
சென்னை மாதவரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தொழில்நுட்பக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. கல்லூரியைத் தொடக்கி வைத்து 40மாணவர்களுக்குச் சேர்க்கைக்கான அட்டைகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். தமிழகத்தின் மீன்வள முன்னேற்றத்துக்கான திட்டம் குறித்த குறுந்தகட்டையும் வெளியிட்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பழவேற்காட்டில் முகத்துவாரம் விரைவில் தூர்வாரப்படும் எனத் தெரிவித்தார்.