மண்டபத்தில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Forums Communities Fishermen மண்டபத்தில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #12865
    Inmathi Staff
    Moderator

    மண்டபத்தில் ஆட்களே இல்லாமல் நின்ற ஒரு மீன் பிடி விசைப் படகில் ஏறி போலீஸார் சோதனை செய்த போது அந்த படகில் 8 சாக்கு பைகளில் அரசால் தடை செய்யப் பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

    சுமார் 150 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த கடலோர போலீசார் அவற்றை போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். தொடர்ந்து அதை பிடித்து வந்தவர்கள் யார், படகின் உரிமையாளர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என தெரிகிறது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This